search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு மார்க்கெட்
    X
    கோயம்பேடு மார்க்கெட்

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாளை முதல் 2 நாட்கள் விடுமுறை

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை விடப்பட உள்ளதாக வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
    சென்னை:

    நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், அத்தியாவசிய பொருட்களான பால், மளிகை, காய்கறி வாங்க கடைகள் திறந்திருக்கும் என்று அரசுகள் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அதன்படி, சென்னை கோயம்பேடு மார்க்கெட் திறந்து இருக்கிறது. ஒவ்வொரு நாளும் காய்கறி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    கோயம்பேட்டில் காய், கனி, மலர் விற்பனை கடைகள் இருக்கின்றன. மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கூட்டமாக குவிகின்றனர். மக்கள் அதிகம் கூடுவதால், கொரோனா வைரஸ் பரவுவதற்கு ஏதுவாக அமையும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை விட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    அதாவது, நாளையும்(வெள்ளிக்கிழமை), நாளை மறுநாளும்(சனிக்கிழமை) விடுமுறை விடப்பட உள்ளதாக வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நல சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மத்திய, மாநில அரசுகள் எடுத்து உள்ள இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு தரும்படி அத்தியாவசியப் பொருட்கள் யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில், அனைவருக்கும் வினியோகம் செய்த பின்னர், 27 மற்றும் 28-ந் தேதிகளில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட உள்ளது. 26-ந்தேதி (இன்று) வழக்கம்போல் மார்க்கெட் இயங்கும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×