search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவல்துறைக்கு அறிவித்த புதிய அறிவிப்புகள்

    தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கையின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த புதிய அறிவிப்புகளை பார்ப்போம்...
    சென்னை:

    சட்டசபையில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவல்துறை மானியக்கோரிக்கையின் போது வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-

    காவல் ஆய்வாளர்களின் மிகை நேரப்பணிக்கான மதிப்பூதியம் ரூ.200 லிருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.160.34 கோடி செலவாகும்.

    டெல்லியில் உள்ள த.சி.கா 8வது அணியில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகள் / ஆய்வாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் (சமையலர், முடிதிருத்துவோர், சலவையாளர் மற்றும் துப்புரவு பணியாளர்கள்) அனைவருக்கும் நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குளிர்காலப் படியைப்போல ஒவ்வொரு வருடமும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை ஒரு மாத அடிப்படை ஊதியத்தில் 10 விழுக்காடு, அல்லது அதிகபட்சமாக ரூ.1,500 என 4 மாதங்களுக்கு வழங்கப்படும். இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.69.18 கோடி செலவாகும்.

    ஊர்க்காவல் படையினருக்கு ஒரு வருடத்திற்கு கூடுதலாக இரண்டு மாத அழைப்பு நாள்கள் வழங்குவதற்கான ஒப்பளிப்பு. இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.10.50 கோடி செலவாகும்.

    காவல் ஆய்வாளர்கள் பணியின் போது வீரதீர செயல்களில் ஈடுபட்டு மரணமடைவதும், படுகாயமடைவது மற்றும் ஊனமடையும் போது வழங்கப்படும் கருணைத் தொகையை, உயர்த்தி வழங்கப்படும்.

    மரணம் அடைபவர்களுக்கு ரூ.10 லட்சத்திலிருந்து 15 லட்சமாகவும், நிரந்தர/ மொத்தமாக ஊனமுற்றவர்களுக்கு ரூ.4 லட்சத்திலிருந்து 8 லட்சமாகவும், மருத்துவக் காரணங்களுக்காக ஒரு கண், கால் விரல்பகுதி, விரல்கள், போன்ற பகுதி துண்டிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாகவும், துப்பாக்கி சூட்டில் ஒன்றிணைந்த பல உடல்பகுதிகள் சேதமடைதல் / உடைபடுதலுக்கு வழங்கப்படும் உதவி தொகை. ரூ.1 லட்சத்தில் இருந்து 3 லட்சமாகவும், சிறுகாயங்களுக்கு வழங்கப்படும் உதவி தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும் வழங்கப்படும்.

    சென்னை பூந்தமல்லியில் புதிய காவல் மாவட்டம் ரூ.49.06 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் புதிய காவல் உட்கோட்டம் ரூ.47.10 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.

    மேட்டுப்பாளையம் புதிய காவல் உட்கோட்டம் செலவில் ரூ.48.16 லட்சம் உருவாக்கப்படும்.

    மதுரை கோச்சடை, மதுரை அனுப்பானடி, விழுப்புரம் மேல்மலையனூர், திருவாரூர் அம்மையப்பன், தருமபுரி காரிமங்கலம் மாட்லம்பட்டி, கள்ளக்குறிச்சி, களமருதூர், திருவெண்ணைநல்லூர் அரசூர், வானகரம் காவல் நிலையம் மற்றும் திருமுடிவாக்கம் காவல் நிலையம், பெரம்பலூர் அம்மாபாளையம் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.

    மதுரை மாநகரில் அண்ணாநகர், கூடல்புதூர், திருநகர் மற்றும் மாட்டுத்தாவணி ஆகிய 4 போக்குவரத்துக் காவல் நிலையங்கள் ரூ.5.52 கோடி செலவில் உருவாக்கப்படும்.

    தருமபுரி பாலக்கோடு, தென்காசி புளியங்குடி, அரவக்குறிச்சியில் போக்குவரத்து காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.

    மாநில நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும் சுங்கச்சாவடிகளுக்காகப் புதிதாக 10 புறக்காவல் நிலையங்கள் உள்ளடக்கிய காவல் நிலைங்கள் ரூ.12.21 கோடி செலவில் உருவாக்கப்படும்.

    புறக்காவல் நிலையங்களை முழுநேர காவல் நிலையமாக ரூ.21.49 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்.

    மாமல்லபுரத்தில் இயங்கி வரும் கன வகை காவல் நிலையத்தினை மெட்ரோ வகை காவல் நிலையமாக ரூ.6.61 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்.

    மதுரை மாவட்டத்திலுள்ள பெருங்குடி, அகஸ்டின்பட்டி, சாப்டூர், கீழவளவு, காடுபட்டி, அப்பன்திருப்பதி, மேலவளவு ஆகிய உதவி ஆய்வாளர் நிலையில் உள்ள காவல் நிலையங்களை ஆய்வாளர் நிலையிலான காவல் நிலையமாக ரூ.1.06 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்.

    ரூ.14.29 கோடி செலவில் சேலம் மாநகர ஆயுதப்படையில் ஒரு தலைமையகப் படைப்பிரிவும், 2 செயல் படைப்பிரிவுகளும் 186 பணியாளர் எண்ணிக்கை கொண்டு உருவாக்கப்படும்.

    ரூ.4.76 கோடி செலவில் கரூர் மாவட்ட ஆயுதப்படைப்பிரிவில் கூடுதலாக ஒரு செயல் படைப்பிரிவு 62 பணியாளர் எண்ணிக்கை கொண்டு உருவாக்கப்படும்.

    ரூ.26.90 லட்சம் செலவில் தருமபுரி மாவட்டத்தில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) பதவி உருவாக்கப்படும்,

    ரூ.29.49 லட்சம் செலவில் சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (அலுவலக தானியங்கல் மற்றும் கணினிமயமாக்கல்) பதவி உருவாக்கப்படும்.

    ரூ.11.74 கோடி செலவில் 6 மாநகரங்களில் (திருச்சி, மதுரை, கோயமுத்தூர், சேலம் மற்றும் திருநெல்வேலி) 53சட்டம் ஒழுங்கு மற்றும் புலனாய்வு (குற்றம்) பிரிவு காவல் ஆய்வாளர்கள் பதவி உருவாக்கப்படும்.

    ரூ.28.72 லட்சம் செலவில் தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகர உட்கோட்டத்தில் ஒரு புதிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் பதவி உருவாக்கப்படும்

    ரூ.21.16 லட்சம் செலவில் கரூர் மாவட்டத்தில் தாந்தோணியில் காவல் நிலையத்தில் ஒரு புதிய காவல் ஆய்வாளர் பதவி உருவாக்கப்படும்

    ரூ.16.09 கோடி செலவில் காவல் உட்கோட்டங்களில் 248 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் உருவாக்கப்படும்.

    1400 எண்ணிக்கையிலான சி.சி.டி.வி.யை கோயம்புத்தூர் மாநகரில் ரூ.17 கோடி செலவில் பொருத்துதல்.

    1200 எண்ணிக்கையிலான சி.சி.டி.வி.யை திருப்பூர் மாநகரில் ரூ.12 கோடி செலவில் பொருத்துதல்.

    தீயணைப்புத்துறை பணியாளர்களுக்கு 15 மற்றும் 25 ஆண்டுகள் பணி முடித்தவுடன் அடுத்த பதவிக்கு தரம் உயர்த்துதல்.

    சிறைத்துறை சீர்திருத்தம் மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையினருக்கான பணி நிபந்தனைகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள், நவீனமாக்குதல் குறித்து அரசால் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நான்காவது காவல் ஆணையத்தால் பரிசீலனை செய்யப்படும்.

    மெரினா மீட்பு நிலையத்தில் 17 தீயணைப்போர் உயிர் காப்பாளர்களுக்கு இடர்பாட்டுப்படி ஒரு மாதத்திற்கு ரூ.6000 என உயர்த்தப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொண்டிற்கு ரூ.12.24 லட்சம் செலவாகும்.

    39 மாவட்டத் தலைமையக தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களுக்கு உதவி மாவட்ட அலுவலர் அந்தஸ்தில் முதன்மை நிலைய அலுவலர் பதவிகள் ரூ.3.98 கோடி செலவில் புதிதாக உருவாக்குதல்

    பணியின்போது மரணமடையும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் அல்லது காயமடையும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கருணைத்தொகை கீழ்க்கண்டவாறு உயர்த்தி வழங்குதல்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×