search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் சிறைகளில் இருந்து மேலும் 66 கைதிகள் ஜாமீனில் விடுதலை

    கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் சிறைகளில் இருந்து மேலும் 66 கைதிகள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
    மதுரை:

    கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறைகளில் உள்ள விசாரணை கைதிகள் கூட்டமாக இருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மதுரை மத்திய சிறையில் ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் சிறிய குற்றங்களில் தொடர்புடைய 54 கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் மதுரை சிறை நிர்வாகத்துக்குட்பட்ட சிறைகளில் இருந்து மேலும் 64 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அருப்புக்கோட்டை கிளை சிறையில் ஒருவர், சிவகங்கை கிளைச் சிறையில் 4 பேர், உத்தமபாளையம் கிளைச் சிறையில் 5 பேர், திருப்பத்தூர் கிளைச் சிறையில் ஒருவர், பெரியகுளம் கிளைச் சிறையில் 3 பேர், தேனி சிறையில் 21 பேர் மற்றும் பாளையங்கோட்டைக்குட்பட்ட நாகர்கோவில் கிளைச் சிறையில் இருந்து 31 கைதிகள் என 66 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
    Next Story
    ×