search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    மகளை நீட் பயிற்சிக்கு அழைத்து சென்ற விவசாயி விபத்தில் பலி

    கோவை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் மகளை நீட் பயிற்சிக்கு அழைத்து சென்ற விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கோவை:

    மதுக்கரை குட்டி கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ் (49). விவசாயி. இவரது மனைவி சண்முகவடிவு (44). இவர்களது மகன் சிபி சக்கரவர்த்தி (20), மகள் அபிநயா (18). சம்பவத்தன்று அபிநயாவின் நீட் தேர்வு பயிற்சிக்கு நாமக்கல்லுக்கு குடும்பத்துடன் சென்று காரில் வீடு திரும்பினர்.

    அப்போது வேலந்தாவளம் நாச்சிபாளையம் கொள்ளிகுட்டை என்ற பகுதியில் வந்தபோது எதிரே வந்த டாரஸ் லாரி மற்றொரு லாரியை முந்தி வந்து சிவப்பிரகாஷ் வந்த கார் மீது மோதியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து காரில் இருந்த சிவப்பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்டு கோவை உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிவப்பிரகாஷை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். பலத்த காயமடைந்த சண்முகவடிவு, சிபி சக்கரவர்த்தி, அபிநயா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    இதேபோல் மதுக்கரை மரப்பாலம் அருகே கோவிந்த ராஜ் என்பவரது மனைவி ஜானகி (65). இவர் மதுக்கரை ராணுவ முகாம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஜானகி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×