search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு- முதல்வர் அறிவிப்பு

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    உலகநாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரசால் இதுவரை 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 170 நாடுகளில் பரவிய கொரோனாவால்  இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் நாளை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 27-ந்தேதி  10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க இருந்தன. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்காமல் இருக்க தேர்வை ஒத்தி வைக்கும்படி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.  குறிப்பாக சட்டசபையில் தமிமுன் அன்சாரி  கோரிக்கை விடுத்திருந்தார்.

    இதையடுத்து தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கி நடைபெறும் எனவும் 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி நடைபெறும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

    தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றுவதால் புதுச்சேரியிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக, அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். 
    Next Story
    ×