search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரே நாடு ஒரே ரே‌‌ஷன் கார்டு திட்டம்
    X
    ஒரே நாடு ஒரே ரே‌‌ஷன் கார்டு திட்டம்

    ஒரே நாடு ஒரே ரே‌‌ஷன் கார்டு திட்டம் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்

    தமிழகம் முழுவதும் ஒரே நாடு, ஒரே ரே‌‌ஷன் கார்டு திட்டத்தை வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.
    சென்னை :

    நாடு முழுவதும் வரும் ஜூன் மாதம் முதல் ஒரே நாடு, ஒரே ரே‌‌ஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், குடும்ப அட்டை (ரே‌‌ஷன் கார்டு) வைத்திருப்பவர்கள் எந்த மாநிலத்தில் உள்ள ரே‌‌ஷன் கடையிலும் சென்று பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.

    ஒரு மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு ஒரே நாடு, ஒரே ரே‌‌ஷன் கார்டு திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்து இருப்பவர்கள், மாநிலத்தில் உள்ள எந்த ரே‌‌ஷன் கடையிலும் பொருட்கள் வாங்க வகை செய்யும் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அமைச்சர் காமராஜ்

    இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில், முதலில் ஒரே நாடு, ஒரே ரே‌‌ஷன் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு இரு மாவட்டங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.

    வெற்றிகரமாக இந்த திட்டம் அமைந்ததால், தமிழகம் முழுவதும் ஒரே நாடு, ஒரே ரே‌‌ஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பை தமிழக சட்டசபையில் உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தார்.
    Next Story
    ×