search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வல்லத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 425 பேர் மீது வழக்கு

    வல்லத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 425 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    வல்லம்:

    தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள மாரியம்மன்கோவில் எதிரே உள்ள திடலில் நேற்று முன் தினம் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில் தடையை மீறி கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அனுமதியின்றி கண்டன கூட்டம் நடத்தியதாக ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பை சேர்ந்த அப்துல்காதர், தமிழ்தேசபேரியக்க தலைவர் மணியரசன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், வல்லம் தி.மு.க. நகர செயலாளர் கல்யாணசுந்தரம், வணிகர் சங்க தலைவர் கோவிந்தராஜ், ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் 250 இஸ்லாமிய பெண்கள் உட்பட 425 பேர்‌ மீது வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×