search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை கும்பலுடன் தொடர்பு- வாலிபர் கைது

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், மாவட்டத்தில் போதை பொருள் கடத்துவோர், விற்பனை செய்வோரை கண்டுபிடித்து, கைது செய்ய போலீசாருக்கு உத்தர விட்டார்.மேலும் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும், அறிவுறுத்தினார். எஸ்.பி. உத்தரவைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ஒழுகினசேரி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற பெண்ணை பிடித்து சோதனை செய்தனர்.

    அவரிடம் 10½ கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் செல்வி(வயது38), தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர். அங்கிருந்து கஞ்சாவை கடத்தி வந்து குமரி மாவட்டத்தில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.செல்வியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குமரி மாவட்டத்தில் கஞ்சாவை வாங்கி விற்கும் பணியில் ஒரு கும்பல் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அந்த கும்பலை கண்டு பிடிக்க போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

    இதில் இரவிபுதூர் கடையை அடுத்த குருவி விளைகாடு பகுதியைச் சேர்ந்த ஆன்டனிசர்வின்(24) என்பவர் சிக்கினார். இவர் கஞ்சா விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×