search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோலார்பேட்டையில் ரெயில்வே குடியிருப்புக்கு குடிநீர் வழங்ககோரி ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
    X
    ஜோலார்பேட்டையில் ரெயில்வே குடியிருப்புக்கு குடிநீர் வழங்ககோரி ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

    ஜோலார்பேட்டையில் ரெயில்வே குடியிருப்புக்கு குடிநீர் வழங்ககோரி ஆர்ப்பாட்டம்

    ஜோலார்பேட்டை ரெயில்வே குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு குடிநீர் வழங்ககோரி பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில்வே குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு தினமும் 30 நிமிடம் முதல் ஒரு மணிநேரம் வரை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் விரக்த்தியடைந்த அவர்கள் பலமுறை இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்நிலையில் இன்று காலை எஸ்.ஆர்.எம்.யூ. கோட்ட துணை செயலாளர் மோகன் தலைமையில் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜோலார்பேட்டை ரெயில்வே நிலையத்திற்கும் ரெயில்வே குடியிருப்புக்கும் பாலாற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் பாலாற்றில் தண்ணீர் வற்றியதால், போர்வெல் மூலமும் ஒப்பந்த அடிப்படையில் வெளியில் இருந்தும் குடிநீர் வாங்கி ரெயில்வே நிர்வாகம் விநியோகம் செய்து வந்தது. தற்பேகோடைகாலம் ஆரம்பிப்பதற்கு முன்பே குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ரெயில்வே குடியிருப்புகளுக்கும் ரெயில்வே நிலையங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால் கடந்த ஆண்டு ரெயில்வே இடத்தில் இருந்து ரெயில்வே வேன்கள் மூலம் சென்னைக்கு காவிரி கூட்டுக்குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டது.

    அதே போன்று அதே பைப்லைன் மூலம் ரெயில்வே ரெயில்வே குடியிருப்புக்கு காவிரி கூட்டுக் குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

    Next Story
    ×