search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை

    துபாயில் இருந்து திரும்பிய பெண்ணுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி முதல் இதுவரை 220-க்கும் மேற்பட்டோர் சீனா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்து திரும்பி வந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், 190-க்கும் மேற்பட்டோர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

    இதில் 40-க்கும் மேற்பட்டோர் வீடுகளில் இருந்து வெளியே சென்றுவரவும் அனுமதிக்கப்பட்டனர். பரிசோதனை அடிப்படையில் ராமநாதபும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண் ஒருவர் சமீபத்தில் துபாயில் இருந்து திரும்பினார்.

    அவருக்கு ஏற்கனவே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், ஊருக்கு வந்த பிறகு காய்ச்சல், சளி தொல்லை இருப்பதாகத் தெரிவித்தார்.

    இதையடுத்து ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். அதனடிப்படையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லாவிட்டாலும், தொடர் கண்காணிப்புக்காக சிறப்பு சிகிச்சை பிரிவில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    Next Story
    ×