search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்- கலெக்டர்

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று திருவாரூர் கலெக்டர் கூறியுள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திரையரங்கு, தனியார் உணவகம், தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கான கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

    கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு காய்ச்சல், இருமல்,மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய ஒருவ வைரஸ் கிருமியாகும். இந்நோயின் அறிகுறிகள் கண்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும், வெளிப்படும் நீர்த் திவலைகள் மூலம் நேரடியாக பரவுகிறது.மேலும் இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய நீர்த் திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்பொழுது கைகள் மூலமாகவும் பரவுகிறது.

    இந்த நோய் வராமல் தடுப்பதற்கு அடிக்கடி கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.ஒவ்வொரு முறையும் கை கழுவ குறைந்தபட்சம் 30 வினாடிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.இருமும் போதும் தும்மும் போதும் முகத்தை கைக்குட்டை கொண்டு மூடிக்கொள்ள வேண்டும்.

    3 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் பொது இடங்கள் மற்றும் கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

    திரையரங்குகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் ,பள்ளி மற்றும் கல்லூரிகளில், கோவில்கள், மசூதிகள் மற்றும் சர்சுகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தினம் 2 முறை பிளிச்சிங் பவுடர் கொண்டு தரைகளை சுத்தப்படுத்த வேண்டும். கிருமி நாசினி கொண்டு இருக்கைகள்,கைப்பிடிகள், டிக்கெட் விற்பனை செய்யும் இடம் போன்றவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.

    கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். இதே போன்று உணவகங்கள், பஸ் நிலையங்கள், அனைத்து வழி பாட்டு தலங்களிலும் இம்முறையை கையாள வேண்டும். இம்முறை சரியாக கையாளப்படுகிறதா என்பதை சுகாதாரத்துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

    கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கான முயற்சிகளை அனைவரும் மேற்கொண்டால் தான் வெற்றி பெற இயலும் என்பதை கருத்தில்கொண்டு அனைத்து தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு முழு நேர ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    Next Story
    ×