search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி மலை ரெயில்
    X
    ஊட்டி மலை ரெயில்

    கொரோனோ பீதி- ஊட்டி மலைரெயிலில் பயணிகள் கூட்டம் குறைந்தது

    மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு ஊட்டிக்கு புறப்பட்ட மலை ரெயிலில் சுமார் 100 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர்.
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணம் செய்ய உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். டிக்கெட் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் திரும்பிச்செல்வார்கள்.

    இந்நிலையில் நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    இன்று கொரோனா வைரஸ் எதிரொலியால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு ஊட்டிக்கு புறப்பட்ட மலை ரெயிலில் சுமார் 100 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். ரெயில்வே ஊழியர்கள் மாஸ்க் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் ரெயில் நிலைய வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் குறித்து ஒலிபெருக்கி மூலம் அடிக்கடி ஒலிபரப்பு செய்யப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக மேட்டுப்பாளையம் பஸ்நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. பஸ்சில் குறைந்த அளவு பயணிகளே பயணம் செய்தனர். பஸ் நிலையம் மற்றும் ஊட்டி ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.

    மேலும் மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின் ரோட்டில் உள்ள பிளாக் தண்டர் கேளிக்கை பூங்காவிற்கு கேரளாவிலிருந்து அதிக சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக கேளிக்கைப் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.

    மேலும் கேரள மாநிலத்திலிருந்து தான் அதிகளவு சுற்றுலா பயணிகள் பூங்காவிற்கு வருவது வழக்கம். இதன் காரணமாக பிளாக் தண்டர் பூங்காவும் மூடப்பட்டுள்ளது.


    Next Story
    ×