search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    காவேரிப்பட்டணத்தில் பணம் கையாடல் செய்த தொண்டு நிறுவன பெண் நிர்வாகி மாயம்

    காவேரிப்பட்டணத்தில் ரூ.10 லட்சம் வரை கையாடல் செய்த தொண்டு நிறுவன பெண் நிர்வாகி மாயமானார். இது குறித்து அவரது மகன் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் இ.பி.எஸ். நகரை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவரது மனைவி சுந்தரி(48). இவர் வின்னர் மகளிர் மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். 

    இந்த தொண்டு நிறுவனத்தின் கீழ் 10-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த குழு உறுப்பினர்கள் பெயரில் இவர் வங்கியில் கடன் பெற்றுள்ளார். ஆனால் அதை குழு உறுப்பினர்களுக்கு கொடுக்கவில்லை. இவ்வாறு சுமார் ரூ. 10 லட்சம் வரை கையாடல் செய்துள்ளார். இதனிடையே குழு உறுப்பினர்கள் பெயருக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதையடுத்து குழு உறுப்பினர்கள் சுந்தரி வீட்டிற்கு வந்து தினமும் தகராறு செய்துள்ளனர். இதனால் சுந்தரியின் வீட்டிலும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம்தேதி காலை வீட்டைவிட்டு சென்ற சுந்தரி வீடுதிரும்ப வில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சுந்தரியின் மகன் தாமரைக் கண்ணன் காவேரிப்பட்டணம் போலீசில், தனது அம்மாவிற்கும், குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை என புகார் அளித்தார்.

    இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×