search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    குளச்சலில் போலீசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    குளச்சலில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    குளச்சல்:

    இளைஞர் காங்கிரஸ் சார்பில் கடந்த 12 -ந் தேதி குளச்சல் காமராஜர் சிலை முன்பு இருந்து இரணியல் வரை தண்டியாத்திரை நினைவு பாதயாத்திரை செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்கு காவல்துறை அனுமதியளிக்கவில்லை.

    இதனால் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் போலீசாருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காங்கிரசார் அண்ணாசிலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்ல போலீசார் கூறினர். கலைந்து செல்லாததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இது தொடர்பாக குளச்சல் போலீசார் இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் உள்பட 6 பேரை கைது செய்தனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தவிர தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றதாக 15 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்யக் கேட்டும் நேற்று காங்கிஸ் சார்பில் குளச்சல் அண்ணாசிலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பிரின்ஸ் எம்.எல்.ஏ.தலைமையில் நடந்தது.

    வசந்தகுமார் எம்.பி.சிறப் புரை ஆற்றினார். மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்து பேசினார்.

    கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராபர்ட் புரூஸ், மாவட்ட பொருளாளர் சாமுவேல் ஜார்ஜ், மாநில மீனவர் காங்கிரஸ் தலைவர் சபீன், மாவட்ட துணைத்தலைவர் மகேஷ் லாசர், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் எனல்ராஜ், மருத்துவர் பிரிவு பினுலால் சிங், நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பேசுகையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க 7 காங்.எம்.எல் .ஏ.க்களும் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம். சபாநாயகர் நடவடிக்கை திருப்தி அளிக்காவிட்டால் சட்டமன்ற புறக்கணிப்பு செய்வோம் என்றார்.

    Next Story
    ×