search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருச்செந்தூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

    திருச்செந்தூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை தனிப்படை போலீசார கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி புதிய துறைமுகம் பாரதியார் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 60). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் கிரைன் ஆபரேட்டராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். முருகன் கடந்த 14-ந்தேதி வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு கோபித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியேறி திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தார்.

    பின்னர் அவர் அப்பகுதியில் உள்ள ஒரு மதுபான கடையில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு பிச்சுவிளை புதூரை சேர்ந்த நவீன் என்ற வீரகுமார் (25) என்பவரும் மது அருந்துவதற்காக வந்தார். பின்னர் இவரும் முருகனும் நண்பர்களாக பேசி தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர். 

    இந்நிலையில் நவீன் என்ற வீரகுமார் தன்னை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று வீட்டில் விடுமாறு முருகனிடம் கூறினார். அதைதொடர்ந்து அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். செல்லும்போது நவீன் என்ற வீரகுமார் செல்போனில் பேசி ஒருவரை வரவழைத்துள்ளார். திடீரென நவீன் என்ற வீரகுமார் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கினார். பின்னர் அங்கு வந்த மற்றொரு நபருடன் சேர்ந்து முருகனை தாக்கியுள்ளார். இதையடுத்து முருகனிடம் இருந்து 5 பவுன் மோதிரம், செல்போன், பைக் உள்ளிட்டவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

    இது குறித்து முருகன் திருச்செந்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் தனிப்படை அமைத்து வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று நவீன் என்ற வீரகுமாரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×