search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புத்திரகவுண்டன்பாளையத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் சீறிப்பாய்ந்த காளையை அடக்கும் வீரர்.
    X
    புத்திரகவுண்டன்பாளையத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் சீறிப்பாய்ந்த காளையை அடக்கும் வீரர்.

    புத்திரகவுண்டன்பாளையத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி

    சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன்பாளையத்தில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன்பாளையத்தில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

    சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    இந்த ஜல்லிக்கட்டில் சேலம் மதுரை, புதுக்கோட்டை, அலங்காநல்லூர், திருச்சி, மதுரை, கோவை திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கொல்லிமலை கருமந்துறை, துறையூர், முசிறி, மதுரை, கரூர், கடம்பூர், கூலமேடு, கிருஷ்ணாபுரம், செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, மங்களபுரம், சின்னசேலம், நெய்வேலி, பண்ருட்டி, விழுப்புரம், நாமக்கல், துறையூர், உப்பிலியாபுரம், கரூர், பழனி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1200 காளைகள் பங்கேற்றன.

    இந்த காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. அப்போது அங்கு தயாராக நின்று கொண்டிருந்த மாடு பிடி வீரர்கள் மாடுகளின் திமிலை பிடித்து அடக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    வீரர்கள் துணிச்சலாக மாடுகளை அடக்கினார்கள். சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் ஓடிச்சென்று பரிசுகளை தட்டிச்சென்றது. காளைகள் முட்டியதில் ஒருசில வீரர்கள் காயம் அடைந்தனர்.

    காளைகளை அடக்கிய வீரர்களுக்கு மோட்டார் சைக்கிள், வாஷிங்மெஷின், தங்க நாணயம், சைக்கிள், குக்கர், பாத்திரம், பேன், பிரிட்ஜ், வெள்ளி நாணயம், ரொக்கப்பரிசு போன்றவை வழங்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட மாடுகளுக்கு முறையாக பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டது. காளைகளும் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்தபின் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்கள் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த போட்டியினை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

    முன்னதாக கலெக்டர் ராமன் முன்னிலையில் மாடு பிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சின்னத்தம்பி, மருதமுத்து, சேலம் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாகானிகேர் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    வாழப்பாடி டி.எஸ்.பி. சூரியமூர்த்தி, ஆத்தூர் டி.எஸ்.பி. ராஜி தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
    Next Story
    ×