search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அரக்கோணம் அருகே சிறுமிகளுக்கு குழந்தை திருமணம்

    அரக்கோணம் அருகே கர்ப்பமான 3 சிறுமிகள் மருத்துவமனைக்கு செல்லும்போது, அவர்கள் குழந்தை திருமணம் செய்துகொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
    அரக்கோணம்:

    பெண்கள் 18 வயதுக்கு மேல்தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது சட்டம். அதை அரசும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. மேலும் ரகசிய தகவலின்பேரில் பல இடங்களில் குழந்தை திருமணங்கள் சமூக நலத்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது. அதோடு பொதுமக்களுக்கு பல விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள குருவராஜப்பேட்டை, அமீர்பேட்டை, பாப்பான்குட்டை ஆகிய பகுதிகளில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் குழந்தை திருமணம் செய்து கொண்டு, கர்ப்பம் தரித்து, அந்தந்த கிராம பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளனர்.

    அங்கு டாக்டர்கள் சிறுமிகளுக்கு பரிசோதனை செய்துவிட்டு அவர்களிடம் விவரம் கேட்டகும்போது குழந்தை திருமணம் செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து மருத்துவத்துறையினர் மாவட்ட சமூக நலத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், குழந்தை திருமணம் செய்துகொண்ட சிறுமிகளிடம் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரது பெற்றோர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் ராணிப்பேட்டை குழந்தைகள் நல காப்பக அலுவலத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதில் ஒரு சிறுமிக்கு 13 வயது மட்டுமே ஆவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×