search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    அருமனை அருகே கடையை உடைத்து பொருட்கள் கொள்ளை

    அருமனை அருகே கடையை உடைத்து பொருட்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    அருமனை மாங்கோடு பகுதியை சேர்ந்தவர் அந்தோணி (வயது 56). இவர் பனச்சமூடு பகுதியில் கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு அவர் வியாபாரம் முடிந்த பின் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் காலையில் கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் மேல் பகுதி சீட் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கடையின் உள் சென்று பார்த்த போது அங்கு இருந்த கம்ப்யூட்டர், மரம் ஏறும் எந்திரம் மற்றும் பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது.

    இதுகுறித்து அருமனை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கடையின் மேல் கூரை உடைக்கப்பட்ட இடம் மற்றும் பொருட்கள் இருந்த இடங்களில் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி சிதம்பரம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 20). இவர் கன்னியாகுமரி சின்ன முட்டம் பகுதியில் உள்ள மீன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் தனது நண்பர்களுடன் அறையில் இருக்கும்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் அங்கு இருந்த செல்போன்களை திருடினார். இதனைப்பார்த்த ராமகிருஷ் ணன் திருடன், திருடன் என அலறினார். அதற்குள் அந்த வாலிபர் செல்போன்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×