search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிக்சை அளிக்க 3 சிறப்பு வார்டுகள்

    ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க 3 சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமானோர் வெளி நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். சீனா, மலேசியா, வளை குடா நாடுகளில் இருந்து திரும்புபவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் சிறப்பு வார்டுகள் அமைக்கப்படுகிறது.

    இது குறித்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் அல்லி கூறியதாவது:-

    ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் 3 சிறப்பு வார்டுகளுடன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களை தனி அறைகளில் சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    மல்டி பாரா மீட்டர், செயற்கை சுவாச கருவிகளுடன் இந்த வார்டுகள் அமைக்கப்படுகிறது.

    இதற்கான சிறப்பு டாக்டர்கள், செவிலியர்கள், சிகிச்சை அறை உதவியாளர் அடங்கிய சிறப்பு மருத்துவக்குழுவும் அமைக்கப்பட்டு 24 மணி நேரம் குழு தயார் நிலையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×