search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர்-கோவை ரோட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மண்பானைகளை படத்தில் காணலாம்.
    X
    கரூர்-கோவை ரோட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மண்பானைகளை படத்தில் காணலாம்.

    வெயிலின் தாக்கம் அதிகரிப்பு - கரூர் பகுதியில் மண்பானை விற்பனை அமோகம்

    வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கரூர் பகுதியில் மண்பானை விற்பனை அமோகமாக நடக்கிறது.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் ஏப்ரல்,மே மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கரூர் பகுதியில் இளநீர், தர்ப்பூசணி, நுங்கு, வெள்ளரி உள்ளிட்ட குளிர்ச்சியூட்டும் பொருட்களை அதிக அளவில் மக்கள் வாங்கி உண்பதை காணமுடிகிறது. முன்பெல்லாம் கிராமங்களில் மண் சட்டியில் சமையல் செய்து சாப்பிட்டு, மண்பானையில் நீர் ஊற்றி வைத்து அதை குடித்து வந்தனர். தற்போது வேலை பளுவின் காரணமாக கிராமங்களில் கூட அதிக அளவில் பிரிட்ஜ் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மண்பாண்டத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

    இந்நிலையில் வெயிலின் தாகத்தை தீர்க்க மண்பானையில் நீரை ஊற்றி வைத்து குடித்தால் தாகம் தணியும் என்பதால், கரூர் பகுதியில் சாலையோரங்களில் தற்போது மண்பானையின் விற்பனை அமோகமாக நடக்கிறது. இதுகுறித்து கரூர் பகுதியை சேர்ந்த மண்பானை வியாபாரி கூறுகையில், பைப் வைத்து விற்பனை செய்யப்படும் மண் பானைகள் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன. இவைகள் அளவிற்கு ஏற்ப ரூ.270, ரூ.300, ரூ.400, ரூ.450 என்ற வகைகளில் விற்கப்படுகிறது. இதை பொது மக்கள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர் என்றார்.
    Next Story
    ×