search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிஎஸ்என்எல்
    X
    பிஎஸ்என்எல்

    தாண்டிக்குடியில் 3 மாதமாக பி.எஸ்.என்.எல். சேவை முடக்கம்

    கொடைக்கானல் கீழ்மலைப்பகுதி தாண்டிக்குடியில் உள்ள பிஎஸ்என்எல் தொலைபேசி நிலையத்தில் கடந்த 3 மாதமாக பிஎஸ்என்எல் தொலைபேசி, பிராட்பேண்ட் சேவை, செல்போன் சேவைகள் முடங்கி உள்ளது.
    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலைப்பகுதி தாண்டிக்குடியில் உள்ள பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலையத்தில் கடந்த 3 மாதமாக பி.எஸ்.என்.எல். தொலைபேசி, பிராட்பேண்ட் சேவை, செல்போன் சேவைகள் சரியான முறையில் இயங்குவதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தாண்டிக்குடியில் மண்டல காபி ஆராய்ச்சி நிலையம், தபால் நிலையம், கூட்டுறவு கடன் சங்கம், காவல் நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் பல அரசு அலுவலகங்கள் உள்ளது. இங்கு பிராட்பேண்ட் கிடைக்காததால் இந்த அரசு அலுவலக வேலைகள் பாதிக்கப்படுகிறது.

    இக்கிராம மக்கள் பணம் போடவும், பணம் எடுக்கவும் முடியவில்லை. மேலும் வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் பெறமுடியாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தாண்டிக்குடியில் இருந்து பாச்சலூர் வரை சுமார் 40 கி.மீ தூரத்திற்கு 5 வருவாய் கிராமங்களில் சுமார் 40 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

    இந்த இணையதள சேவை இயங்காததால் இப்பகுதி மக்கள் அலுவலக வேலைக்காக கொடைக்கானல், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    எனவே அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து பழுதடைந்த பி.எஸ்.என்.எல். சேவையை சரிசெய்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×