search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    திண்டிவனம் திமுக எம்எல்ஏ சீதாபதி வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு

    திண்டிவனம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ சீதாபதி வெற்றி பெற்றது செல்லும் என சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
    சென்னை:

    கடந்த சட்டசபை தேர்தலில் திண்டிவனம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சீதாபதி சொக்கலிங்கம் 101 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, அந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏ சீதாபதி வெற்றி பெற்றது செல்லும் என தீர்ப்பளித்தது. மேலும், அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×