search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
    X
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

    திருச்செந்தூரில் கோவிலில் இன்று இரவு தெப்பத்திருவிழா

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    திருச்செந்தூர்:

    ‘தமிழ் கடவுள்’ முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பெருமை பெற்று விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமிஅம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருநாளான நேற்று நடந்தது.

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் திரளான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து, தேரோட்டத்தில் கலந்து கொண்டனர்.

    11-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான்தெய்வானை அம்பாள் எழுந்தருளி, சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபத்தில் சேர்கிறார்கள். அங்கு சுவாமிஅம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது.

    இரவு 7 மணிக்கு சுவாமிஅம்பாள் பு‌‌ஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி, வெளிவீதி வழியாக நெல்லை நகரத்தார் தெப்பக்குளம் மண்டபத்தை சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி, சுவாமிஅம்பாள் தெப்பத்தில் எழுந்தருளி, 11 முறை சுற்றும் தெப்பத்திருவிழா நடக்கிறது.

    விழாவின் நிறைவு நாளான நாளை (10-ந் தேதி) மாலை 4.30 மணிக்கு சுவாமிஅம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இரவு 9 மணிக்கு சுவாமி அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று கோவிலை சேர்கிறார்கள்.

    Next Story
    ×