search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயோமெட்ரிக் வருகை பதிவு
    X
    பயோமெட்ரிக் வருகை பதிவு

    கொரோனா வைரஸ்- ஆசிரியர்கள் ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவு ரத்து

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை தற்காலிகமாக பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்துள்ளது.
    சென்னை:

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல், கை கழுவுதல், கை கொடுக்கும் பழக்கத்தை தவிர்த்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

    அதன் அடிப்படையில் ஒரு சில மாநிலங்களில் ஆசிரியர்கள் பயோமெட்ரிக் வருகை பதிவிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு பயன்படுத்துவதை நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்கின்றனர்.

    கை விரல் பதிவு மூலம் வருகையை உறுதிப்படுத்தல் முறையால் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படக்கூடாது என்பதற்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

    இந்த மாதம் 31-ந் தேதி வரை பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை நிறுத்துவது என்றும் பதிவேட்டில் கையெழுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாணவர்கள் வருகை பயோமெட்ரிக் முறை இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. ஒரு சில பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×