search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    பாஜக உறவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்- திருமாவளவன்

    வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டுமானால் பா.ஜனதாவுடன் இருக்கும் உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

    ராமநாதபுரம்:

    விடுதலை சிறுத்தை கள் கட்சி தலைவர் திருமாவளவன் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு,தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

    எனவே மோடி அரசு நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டம் மக்கள் தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நடைமுறைபடுத்தாமல் திரும்ப பெற வேண்டும்.

    இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தி மதத்தின் அடிப்படையில் இந்த நாட்டை பிளவுப்படுத்தும் முயற்சியில், இந்திய சமூகத்தை பிளவுப்படுத்தும் முயற்சியில் மோடி அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அரசமைப்பு சட்டத்தை ஈர்த்து போகச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    குடியுரிமை திருத்த சட்டம் ஒட்டு மொத்த தேச மக்கள் அனைவருக்கும் ஆபத்தானது. குறிப்பாக இந்த சட்டம் இந்துக்களுக்கும் எதிரானது.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டுமானால் பா.ஜனதாவுடன் இருக்கும் உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    மக்கள் விரோத சட்டங்களை ஆதரிக்கும் நிலையை கைவிட வேண்டும். அ.தி.மு.க. இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று துணிந்து முடிவெடுக்க வேண்டும். சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×