search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பழைய இரும்புக்கு ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் - வியாபாரிகள் வலியுறுத்தல்

    பழைய இரும்புக்கு ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என திருச்சி மாவட்ட பழைய இரும்பு வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தி உள்ளது.
    திருச்சி:

    திருச்சி மாவட்ட பழைய இரும்பு வியாபாரிகள் முன்னேற்ற சங்க ஆலோசனை கூட்டம் டி. எஸ். எம். பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் ரவி முத்துராஜா தலைமை தாங்கினார். செயலாளர் எம்.பி. பாஸ்கர் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் சங்கத்தின் துணை செயலாளராக சரவணன் மற்றும் செயற்குழு உறுப்பினராக ராமர் நியமிக்கப்பட்டனர். சரக்கு மற்றும் சேவை வரியை பழைய இரும்புக்கு 18சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய மாநில அரசிடம் வலியுறுத்துவது,

    மாதாந்திர ரிட்டன் கணக்கு அதாவது ஜி.எஸ்.டி.ஆர்.-1 ஒவ்வொரு மாதம் 10-ந்தேதிக்குள், ஜி. எஸ். டி. ஆர்-2 15-ந் தேதிக்குள், ஜி.எஸ்.டி.ஆர்-3 20-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டி உள்ளது. இப்படி ஒரு நிறுவனத்தின் கணக்கை மூன்று பிரிவாகப் பிரித்து ரிட்டன் தாக்கல் செய்யும்போது வணிகர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. அனைத்தும் ரிட்டன் கணக்குகளும் ஒன்று சேர்த்தால் போல பழைய முறைப்படி 20 நாட்களுக்கு ஒரே முறையாக ரிட்டன் தாக்கல் செய்ய எளிமைபடுத்த வேண்டும்.

    தவறுதலாக மாதாந்திர ரிட்டன் தாக்கல் செய்தால் அதை சரிசெய்ய திரும்பவும் ரிட்டன் (ரிவைஸ்டு ரிட்டன்) தாக்க செய்ய அனுமதிக்க வேண்டும். காலம் தாழ்த்தி கணக்கு தாக்கல் செய்தால் வணிகர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. அதை வணிகர் நலன் கருதி அதிகாரிகள் அதிலிருந்து வரிவிலக்கு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் முடிவில் பொருளாளர் ஹக்கீம் நன்றி கூறினார்.
    Next Story
    ×