search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை பவுனுக்கு ரூ.104 குறைந்தது

    தங்கம் விலை இன்று பவுனுக்கு 104 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 4207 ரூபாய்க்கும், ஒரு சவரன் 33 ஆயிரத்து 656 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
    சென்னை:

    கொரோனா வைரஸ் பாதிப்பால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ. 33 ஆயிரத்தை தாண்டியது.

    நேற்று ஒரு கிராம் ரூ. 4 ஆயிரத்து 220-க்கும், ஒரு பவுன் ரூ. 33 ஆயிரத்து 760-க்கும் விற்பனை ஆனது. இன்று கிராமுக்கு ரூ. 13 குறைந்து ரூ. 4207-க்கும், பவுனுக்கு ரூ. 104 குறைந்து ரூ. 33 ஆயிரத்து 656-க்கும் விற்பனை ஆகிறது.

    வெள்ளி விலை இன்று கிராமுக்கு 10 காசு உயர்ந்தது. ஒரு கிராம் ரூ. 50.50-க்கும், ஒரு கிலோ ரூ. 50 ஆயிரத்து 500-க்கும் விற்பனை ஆகிறது.

    Next Story
    ×