search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன் ராதாகிரு‌‌ஷ்ணன்
    X
    பொன் ராதாகிரு‌‌ஷ்ணன்

    தமிழகத்தில் பாஜக அங்கம் வகிக்கும் அரசு அமையும்: பொன் ராதாகிரு‌‌ஷ்ணன்

    தமிழகத்தில் 2021-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு பாஜக அங்கம் வகிக்கக்கூடிய அரசு அமையும். அதையே மக்களும் விரும்புகிறார்கள் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிரு‌‌ஷ்ணன் தெரிவித்தார்.
    சென்னை :

    காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி திருவிழா நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த கோவிலுக்கு வந்த பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிரு‌‌ஷ்ணன் ஆகியோர் காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.

    தரிசனம் முடிந்து வெளியே வந்த முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிரு‌‌ஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் வருகிற 2021-ம் ஆண்டு தேர்தலை கவனத்தில் வைத்து செயல்பட்டு வருகிறோம். 2021 தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா அங்கம் வகிக்கக் கூடிய அரசு அமையும். மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். அதை நோக்கியே எங்கள் பயணம் இருக்கும்.

    குடியுரிமை திருத்த சட்டம் என்பது இந்த நாட்டில் வாழும் யாரையும் அப்புறப்படுத்தக்கூடிய சட்டம் இல்லை என்பதை பிரதமர் மோடி தெளிவாக கூறியுள்ளார். இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழக்கூடாது என்ற சிந்தனையுடன் தி.மு.க. செயல்படுகிறது. 2021-ம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்து அவர்கள் மக்களை முட்டாள்களாக்கி வருகின்றனர்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் பேச்சுக்களையும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசும் பேச்சுக்களையும், கவனித்தால் ஒத்து அமைத்திருப்பது போல் தெரிகிறது. நாடு மீண்டும் பிளவுபட வேண்டும் என்று தி.மு.க விரும்புகிறது. 1947-ம் ஆண்டு நாடு பிளவுபட்ட போது, க‌‌ஷ்டப்பட்டு பாகிஸ்தானை பெற்றோம். சிரித்து கொண்டே இந்துஸ்தானை பெறுவோம் என்று ஜின்னா சொன்னார். ஜின்னா சொன்னதை நடைமுறைப்படுத்தும் வகையில் தி.மு.க. தலைவர் செயல்படுகிறார். பாகிஸ்தானில் இருக்கும் முஸ்லிம்களை எப்படி இங்கு கொண்டு வந்து குடி வைக்க முடியும். அவரது எந்த முயற்சியும் வெற்றி பெறாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×