என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்மூர் அருகே சுடுகாட்டில் மரத்தில் தொங்கிய நிலையில் மாணவர் பிணம்
Byமாலை மலர்2 March 2020 10:24 AM GMT (Updated: 2 March 2020 10:24 AM GMT)
அம்மூர் அருகே 9-ம் வகுப்பு மாணவன் சுடுகாட்டு மரத்தில் பிணமாக தொங்கினான். கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராணிப்பேட்டை:
அம்மூர் அருகே உள்ள பைராகி காலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். அவருடைய மகன் தங்கராசு (வயது 14), அம்மூரில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற தங்கராசு அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று பள்ளி காலனி அருகே சுடுகாடு பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் தங்கராசு பிணமாக கிடப்பதாக ராணிப்பேட்டை பேலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கராசு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அடித்துக்கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×