search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிஎஸ்டி
    X
    ஜிஎஸ்டி

    ஏப்ரல் 1-ந் தேதி முதல் மாதாந்திர ஜி.எஸ்.டி. லாட்டரி அறிமுகம்

    பொதுமக்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு வழங்கப்படும் ரசீதை அடிப்படையாக கொண்டு பரிசுகள் வழங்கும் புதிய லாட்டரி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
    சென்னை:

    ஜி.எஸ்.டி. வரியுடன் கூடிய பொருட்களை வாங்கும்போது விற்பனையாளர்கள் கொடுக்கும் ரசீதுகளை பொதுமக்கள் கேட்டு வாங்க வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காகவே சரக்கு மற்றும் சேவை வரி லாட்டரி திட்டத்தை ஏப்ரல் 1-ந் தேதி முதல் அறிமுகம் செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது.

    இதன் மூலம் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு கட்டுப்படுத்தப்படும் என்றும் அரசுக்கு வருவாய் கூடும் என்றும் மத்திய அரசு கணக்கு போட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி. வரியுடன் கூடிய பொருட்களை வாங்கும் பொதுமக்கள் அதற்கான ரசீதை வைத்தே இந்த லாட்டரி குலுக்கலில் பங்கேற்க முடியும்.

    இதற்காக ஜி.எஸ்.டி. நெட்வொர்க் (ஜி.எஸ்.டி.என்.) என்ற பெயரில் புதிய செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    பொதுமக்கள் தங்களது ஜி.எஸ்.டி. பில்லுடன் கூடிய ரசீதை வைத்து செல்போன் செயலியில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.

    இதன்மூலம் பொதுமக்கள் லாட்டரி பரிசு திட்டத்தில் பங்கு பெற முடியும். இந்த செயலி இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    மத்திய அரசு

    ஜி.எஸ்.டி. பில் வைத்திருக்கும் அனைவரும் இந்த லாட்டரி குலுக்கலில் பங்கு பெறலாம். இதில் பங்கேற்பதற்கு குறிப்பிட்ட தொகைக்கு பொருட்கள் வாங்கி இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜி.எஸ்.டி. லாட்டரி திட்ட பரிசு தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையில் கிடைக்கும் வகையில் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    Next Story
    ×