என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  மணப்பாடு அருகே கஞ்சா பதுக்கிய 4 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணப்பாடு அருகே கஞ்சா பதுக்கிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  உடன்குடி:

  குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா தலைமையில் போலீசார் மணப்பாடு அருகே சுனாமிநகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு போலீசாரை பார்த்ததும் 4 பேர் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்.

  பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சுனாமி நகரைச் சேர்ந்த ஜோசப் மகன் ரூபன்(36), ரதிபன்(36), அஜித்(26), முத்துகுமார்(21) ஆகியோர் என்பதும், கஞ்சாவை சின்ன சின்ன பொட்டலங்களாக போட்டு கொண்டிருந்ததும் தெரியவந்தது. அதில் சிறு சிறு பொட்டலங்களாக 1 கிலோ 500 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்தது.

  இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து, திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் ரொக்க பணம் ரூ.9 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

  Next Story
  ×