என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  அதிராம்பட்டினம் அருகே வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிராம்பட்டினம் அருகே வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  அதிராம்பட்டினம்:

  அதிராம்பட்டினம் அருகில் உள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சியைச் சேர்ந்தவர் அப்பாத்துரை. இவரது மகன் ஸ்ரீகாந்த் (வயது 40). கடந்த சில மாதங்களாக இவர் மனநலம் பாதித்த நிலையில் தொடர்ந்து மது குடித்து வந்தார். இதனால் உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்தார்.

  இந்நிலையில் நேற்று அதிராம்பட்டினம் சால்ட் லைன் பகுதியில் வி‌ஷம் குடித்தநிலையில் இறந்து கிடந்தார். இதையடுத்து தகவலறிந்த அதிராம்பட்டினம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு சென்றுள்ளனர்.

  இதுபற்றி அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×