என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
துருக்கி வெங்காயம்
துருக்கியில் இருந்து வந்த 100 டன் வெங்காயம் வீணானது
By
மாலை மலர்29 Feb 2020 7:47 AM GMT (Updated: 29 Feb 2020 7:47 AM GMT)

பொதுமக்கள், சில்லரை வியாபாரிகள் வெளிநாட்டு வெங்காயத்தை வாங்குவதற்கு ஆர்வம் காட்டாததால் பல கடைகளில் தேங்கி அழுகும் நிலையில் உள்ளது.
போரூர்:
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலத்தில் வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது வெங்காயம் வரத்து மூன்றில் ஒரு பங்காக குறைந்தது.
இதையடுத்து கிலோ ரூ.25-க்கு விற்ற வெங்காயத்தின் விலை திடீரென அதிகரித்து கிலோ ரூ.180 வரை மொத்த விற்பனையில் விற்கப்பட்டது. வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது.
மேலும் எகிப்து, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. இதையடுத்து வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்தது. இன்று மொத்த விற்பனையில் மகாராஷ்டிரா வெங்காயம் ரூ.22-க்கும் ஆந்திரா வெங்காயம் ரூ.15-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
துருக்கி, எகிப்து, ஈரான், ஹாலந்து ஆகிய நாடுகளில் இருந்து ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் ஆர்டர் செய்த வெங்காயம் கப்பல் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் வந்து தற்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கிலோ ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் பொதுமக்கள், சில்லரை வியாபாரிகள் மற்றும் ஓட்டல் சமையல் தேவைகளுக்கு வெளிநாட்டு வெங்காயம் வாங்குவதற்கு யாரும் ஆர்வம் காட்டவில்லை.
இதன் காரணமாக அந்த வெங்காயம் பல கடைகளில் தேங்கி அழுகும் நிலையில் உள்ளது. மேலும் மார்க்கெட்டில் நடைபாதை வியாபாரிகள் இறக்குமதி வெங்காயத்தை கூறு கட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

Next Story
×