search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கரூர்:

    கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மண்மங்கலம் வட்டக்கிளை சார்பில், அகில இந்திய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் வெண்ணெய்மலை கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் சுரே‌‌ஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுப்பிர மணியன் கோரிக்கையை விளக்கி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில், தற்காலிக, ஒப்பந்த மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் அனைவரையும் வரன்முறைப்படுத்திட வேண்டும். காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை கலைத்து விட்டு, தேசிய ஓய்வூதிய திட்ட சந்தாதாரர்கள் அனைவரையும் பய னளிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்திட வேண்டும்.

    5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியமாற்றத்தை உறுதி செய்திட வேண்டும். வகுப்புவாத சக்திகளை முறியடித்து மதசார்பின்மையை பாதுகாத்திட வேண்டும். விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த பொதுவினியோக முறையை பலப்படுத்திட வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

    இதில் மாவட்ட செயலாளர் சக்திவேல், சத்துணவு ஊழியர் சங்க கரூர் ஒன்றிய தலைவர் செல்வராணி உள்பட அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×