search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
    X
    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    கலவரங்களை தூண்டி விட்டு திமுக ஆட்சிக்குவர துடிக்கிறது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு

    தமிழகத்தில் அ.தி.மு.க.வின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தி.மு.க. பல்வேறு போராட்டங்களையும், கலவரங்களையும் தூண்டி விட்டு ஆட்சிக்கு வர துடிக்கிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தர பாண்டியம் பேரூராட்சியில் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திர பிரபா முத்தையா தலைமை வகித்தார்.

    வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய தலைவர் சிந்துமுருகன், மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் வசந்தி மான்ராஜ், மாவட்ட கவுன்சிலர் மகாலட்சுமி கருப்பசாமி, சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் முத்தழகு முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் ஏழை- எளிய மக்கள் ஆட்சி நடைபெறுகின்றது. ஏழை-எளிய மக்களைப் பற்றி சிந்தித்து தமிழக முதல்வர் எடப்பாடியார் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை தமிழக முதல்வர் எடப்படியார் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். சுந்தரபாண்டியம் பேரூராட்சி என்றும் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை. இங்கு மாற்று கட்சிகளுக்கு வேலையே கிடையாது.

    விருதுநகர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் 300 கோடி ரூபாயில் அரசு மருத்துவக் கல்லூரியை தமிழக முதல்வர் எடப்பாடியார் பெற்றுக் கொடுத்துள்ளார்.

    வரும் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி பணிகளை தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். வத்ராயிருப்பு பகுதிக்கு தனி தாலுகா பெற்றுக்கொடுத்தது அ.தி.மு.க. அரசுதான். பல்வேறு இடையூறுகளைத் தாண்டி வத்ராயிருப்பு பகுதிக்கு தனி தாலுகா வாங்கி கொடுத்துள்ளோம். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு அரசு கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    எடப்பாடியார் இருக்கும் வரை அவர் தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர். தமிழகத்தில் அ.தி.மு.க.வின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தி.மு.க. பல்வேறு போராட்டங்களையும், கலவரங்களையும் தூண்டி விட்டு ஆட்சிக்கு வர துடிக்கிறது. தற்போது முஸ்லிம்களை தூண்டி விட்டு தி.மு.க.வினர் அரசியல் செய்து வருகின்றனர்.

    மதக்கலவரத்தை தூண்டி விடுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று ரஜினி கூறியுள்ளார். ஒவ்வொருவருக்கும் அவர்களின் உரிமையை கேட்க உரிமை உள்ளது. அதை விடுத்து கலவரம் செய்ய யாருக்கும் உரிமை கிடையாது. சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தினால் ஒரு இஸ்லாமியர்கள் யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால் கூறுங்கள் நான் நடவடிக்கை எடுக்கின்றேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடியார் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூற முடியாமல் மு.க.ஸ்டாலின் வெளியேறிச் சென்று விட்டார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் பேட்ரிக், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிர் கோட்டை சுப்பிரமணியன், சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, ராஜபாளையம் முன்னாள் ஒன்றிய செயலாளர் முருகையாபாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்தையா, சுந்தர பாண்டியன், பேரூர் செயலாளர் மாரிமுத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை வத்திராயிருப்பு வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்புராஜ் செய்திருந்தார்.
    Next Story
    ×