search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கூடலூரில் சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

    கூடலூரில் பிளஸ்-2 மாணவிக்கு நடக்கவிருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கூடலூர்:

    கூடலூர் பொம்மையசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ் என்பவரது மகன் செந்தில்குமார் (வயது 23) விவசாயி. இவருக்கும் இவரது உறவினர் பெண் பிளஸ்2 படித்து முடித்த சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தொலைபேசி மூலம் சின்னமனூரிலுள்ள சைல்டுலைன் துணை மையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    இதையடுத்து சைல்டுலைன் துணை மைய பணியாளர்கள் ராதா, பழனியம்மாள் ஆகியோர் கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். பின்னர் சப்இன்ஸ்பெக்டர் தினகரபாண்டியன் தலைமையில் போலீசாருடன் சம்பவ இடத்திற்குச் சென்று நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி மணப்பெண்ணின் குடும்பத்தாரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் அவர்களிடம் பெண்ணுக்கு 18 வயது முடியும் முன் திருமணம் செய்து வைத்தால் சட்டப்படி குற்றம். பெண்ணின் பெற்றோரும் மாப்பிளையும் சிறைக்குச் செல்வார்கள். எனவே பெண்ணிற்கு 18 வயது முடிந்தபின் திருமணம் செய்து கொடுங்கள் என போலீசாரும் சைல்டு லைன் அமைப்பினரும் அறிவுரை கூறினர். இதையடுத்து சிறுமிக்கு 18 வயது முடிந்த பின் திருமணம் நடத்திக்கொள்வதாக பெற்றோர்கள் எழுதிக்கொடுத்தபின் போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் கூடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×