என் மலர்

  செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  கோவை மாநகரில் 1,245 வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியீடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடந்த முறை 1,216 வாக்குச்சாவடிகள் இருந்த கோவை மாநகரில் தற்போது 29 வாக்குச்சாவடி அதிகரித்து மொத்தம் 1,245 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  கோவை:

  கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாநகராட்சி கமி‌ஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறும்போது,

  மாநகராட்சியில் மொத்தம் 14 லட்சத்து 85 ஆயிரத்து 163 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 7 லட்சத்து 44 ஆயிரத்து 547 ஆண்களும், 7 லட்சத்து 40 ஆயிரத்து 813 பெண்களும், 203 மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர்.

  கடந்த முறை 1,216 வாக்குச்சாவடிகள் இருந்தது. தற்போது 29 வாக்குச்சாவடி அதிகரித்து மொத்தம் 1,245 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1,400 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது.

  இந்த பட்டியலில் இருந்து பொதுமக்களின் பார்வைக்கும், அரசியல் கட்சிகளின் பார்வைக்கும் வைக்கப்படும், அந்த வாக்குச் சாவடிகளில் மாற்றம் இருந்தால் தெரிவிக்கலாம்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×