search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    தமிழக காங். எம்.பி.க்களுக்கு அவசர அழைப்பு

    தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு டெல்லி மேலிடம் அவசர அழைப்பு விடுத்து இருப்பது காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் 8 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் உடனடியாக டெல்லி வருமாறு கட்சி மேலிடம் அவசர அழைப்பு விடுத்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து அனைவரும் தங்களது நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்கள்.

    காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றார். அவர் இன்னும் தமிழகம் திரும்பவில்லை. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு டெல்லி மேலிடம் அவசர அழைப்பு விடுத்து இருப்பது காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×