என் மலர்
செய்திகள்

கைது
பொன்னேரியில் ஜவுளிக்கடையில் திருடிய வாலிபர் கைது
பொன்னேரியில் ஜவுளிக்கடையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த தடபெரும்பாக்கம் வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் முகமது யூசுப். இவர் பொன்னேரி புதிய தேரடி தெருவில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு அவரது கடைக்கு வந்த வாலிபர் துணி எடுத்தார். அவர் ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள துணி எடுத்துக் கொண்டு பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டார்.
திடீரென அவர் துணிகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து முகமது யூசுப் பொன்னேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் ஜவுளிக்கடையில் துணிகளை திருடி தப்பியது பொன்னேரி அடுத்த வெண்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்ச பரத் என்று தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story