search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சிறுமிகளின் ஆபாச படங்களை பார்த்த 600 பேர் கைதாகிறார்கள்

    ஆபாச படம் பார்த்து பிடிபட்ட 600 பேர் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
    சென்னை:

    ஆபாச இணைய தளங்களில் புகுந்து சிறுவர்-சிறுமிகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்களை கைது செய்ய சமீபத்தில் போலீசார் முடிவு செய்தனர்.

    இதன்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவின் கூடுதல் டி.ஜி.பி. ரவி மேற்பார்வையில் மாநிலம் முழுவதும் ஆபாச படங்களை பார்ப்பவர்களின் பட்டியலை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக 600 பேர்களின் பெயர் விவரங்கள், முகவரியோடு சேகரிக்கப்பட்டது. இதனை சென்னை உள்பட அனைத்து மாவட்ட போலீசாருக்கும் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

    இதன் மீது சென்னையிலும் வெளி மாவட்டங்களிலும் போலீசார் சில நாட்களுக்கு முன்பு நடவடிக்கை எடுத்தனர்.

    சென்னை கோவை உள்ளிட்ட இடங்களில் மேலும் ஒரு சில பகுதிகளிலும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் பின்னர் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மீதான நடவடிக்கையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து ஆபாச படம் பார்த்து பிடிபட்ட 600 பேர் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    சென்னையை பொறுத்தவரையில் ஆபாச படங்களை பார்த்த 100 பேரின் பட்டியல் வழங்கப்பட்டது. இதில் 2 பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைவரையும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதே போன்று அனைத்து மாவட்ட போலீசாரும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பே போலீசார் எடுக்க தொடங்கியுள்ள இந்த நடவடிக்கையால் செல்போனில் ஆபாச படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆபாச படங்களை பார்ப்பதும், செக்ஸ் தொடர்பான குற்றங்கள் அரங்கேறுதற்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும், இது தொடர்பான விழிப்புணர்வை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×