என் மலர்

  செய்திகள்

  கர்ப்பிணி
  X
  கர்ப்பிணி

  சிறுமியை கர்ப்பிணியாக்கிய வட மாநில வாலிபர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பிணியாக்கிய வட மாநில வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
  கோவை:

  ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிபீக் தாஸ் (வயது 20). இவர் அன்னூர் கரியம்பாளையத்தில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

  அப்போது அதே மில்லில் வேலை பார்க்கும் பெண் ஒருவரின் மகளான 15 சிறுமியுடன் பிபீக் தாசுக்கு பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். அப்போது பிபீக்தாஸ் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கற்பழித்தார்.

  இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். தான் கர்ப்பமானது குறித்து சிறுமி தனது காதலரான பிபீக்தாசிடம் கூறினார். மேலும் தன்னை உடனடியா கதிருமணம் செய்யும்படி கூறினார்.

  இதனையடுத்து பிபீக்தாஸ் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமால் வீட்டில் வைத்து சாமி படம் முன்பு சிறுமியை திருமணம் செய்தார். மேலும் சிறுமி கர்ப்பமான விபரம் அவரது பெற்றோருக்கு தெரியாது.

  இந்தநிலையில் 9 மாத கர்ப்பமாக இருந்த சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக சிறுமியின் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

  அப்போது சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பது குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிறுமியை அவரது பெற்றோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்.

  இது குறித்து சிறுமியின் பெற்றோர் சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வட மாநில வாலிபர் பிபீக் தாஸ் மீது நடவடிக்கை எடுக்குபடி துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

  புகாரின் பேரில் போலீசார் சிறுமியை கர்ப்பிணியாக்கிய பிபீக் தாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
  Next Story
  ×