search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்
    X
    துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்

    தமிழ்நாட்டுக்கு திமுக செய்த துரோகத்தை மக்கள் மறக்கவில்லை- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

    காவிரி, முல்லை பெரியாறு போன்ற பிரச்சனைகளில் தமிழக மக்களுக்கு தி.மு.க. செய்த துரோகத்தை மக்கள் இன்றளவும் மறக்கவில்லை என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் சார்பில் சென்னை தண்டையார்பேட்டை இளையமுதலி தெருவில் பொதுக்கூட்டம், 18 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவுக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், திரைப்பட இயக்குனர் லியாகத் அலிகான் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

    ஜெயலலிதா வகுத்துத்தந்த பாதையில் தடம் மாறாமல் அ.தி.மு.க. சென்று கொண்டு இருக்கிறது. அ.தி.மு.க.வை யாராலும் வெல்ல முடியாது என்ற நிலையை ஜெயலலிதா உருவாக்கி தந்து இருக்கிறார். அவருடைய தொலைநோக்கு திட்டத்தால் குடிசை பகுதியில் வசித்த 6½ லட்சம் பேருக்கு இன்றைக்கு காங்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டு உள்ளது.

    எப்படியாவது முதல்- அமைச்சராகிவிட வேண்டும் என்ற கனவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறார். மாநகராட்சி தேர்தல் வரப்போகிறது. மக்கள் உஷாராக இருக்க வேண்டும். ஏன் என்றால் தி.மு.க. ஆட்சியில் 155 வார்டுகளில் முறைகேடு தொடர்பாக ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். இதில் 99 வார்டுகளின் தேர்தல் முடிவுகள் செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆதரவுடன் அ.தி.மு.க. அரசு மீண்டும் மகத்தான வெற்றி பெறும்.

    தமிழக மக்களுக்கு தி.மு.க. செய்த துரோகத்தை மக்கள் இன்றளவும் மறக்கவில்லை. காவிரி நதி பங்கீடு, முல்லைப் பெரியாறு அணை விவகாரம், கச்சத்தீவு பிரச்சனை இலங்கை தமிழர்களின் படுகொலை சம்பவங்களில் தி.மு.க.வின் துரோகத்தை மறக்க முடியாது.

    இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
    Next Story
    ×