search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை ரெயில் நிலையம்
    X
    மதுரை ரெயில் நிலையம்

    மதுரை வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

    தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
    மதுரை:

    மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வடக்கு ரெயில்வே பகுதியில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே மதுரையில் இருந்து நாளை (26-ந்தேதி) இரவு 11.35 மணிக்கு புறப்படுவதாக இருந்த டேராடூன்/ சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரெயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    நெல்லை- தாழையூத்து இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் வருகிற 29-ந்தேதி வரை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி திருச்சி- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22627/ 22628) இருமார்க்கங்களிலும் கோவில்பட்டி வரை மட்டுமே இயங்கும்.

    தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16191) திண்டுக்கல் வரை மட்டுமே இயங்கும்.

    நாகர்கோவில்- தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16192) திண்டுக்கல்லில் இருந்து புறப்படும்.

    பாலக்காடு- திருச்செந்தூர் பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56769/ 56770) இன்று மற்றும் 27, 28, 29 ஆகிய தேதிகளில் சாத்தூர்- நெல்லை இடையே இரு மார்க்கங்களிலும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

    நெல்லை- தாதர் வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 11022) நெல்லையில் இருந்து மாலை 3 மணிக்கு பதில் ஒரு மணி நேரம் தாமதமாக 4 மணிக்கு புறப்படும்.

    தூத்துக்குடி- திருச்செந்தூர் பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56767/56768) இருமார்க்கங்களிலும் தூத்துக்குடி- நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×