search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    21 அரிவாள்கள் மீது நின்று சாமியார் அருள்வாக்கு சொல்லும் காட்சி
    X
    21 அரிவாள்கள் மீது நின்று சாமியார் அருள்வாக்கு சொல்லும் காட்சி

    21 அரிவாள்கள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய சாமியார்... 68 கிலோ மிளகாய் தூளை கரைத்து அபிஷேகம்

    கோவில்பட்டி கோவில் கொடைவிழாவில் 21 அரிவாள்கள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய சாமியாருக்கு பக்தர்கள் 68 கிலோ மிளகாய் தூளை கரைத்து அபிஷேகம் செய்தனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தலில் ராஜகணபதி அருள்தரும் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் 65-ம் ஆண்டு கொடை விழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி காலை 11 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6.30 மணிக்கு கோவிலில் உள்ள படி 18-க்கும் படிபூஜை நடைபெற்றது. தொடர்ந்து, 8.30 மணிக்கு பதினெட்டாம்படி கருப்பசாமி குதிரை பவனி வருதலும், நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நடைபெற்றது.

    நேற்று காலை 7 மணிக்கு பக்தர்களின் 21 அக்னிச்சட்டி ஊர்வலம், 9 மணிக்கு பொங்கலிடுதல் நிகழ்ச்சி, பகல் 12 மணிக்கு பழ பூஜை நடைபெற்றது. பின்னர், 21 அரிவாள்கள் மீது நின்று சாமியார் அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    இதையடுத்து பக்தர்கள் 68 கிலோ மிளகாய் தூளை கரைத்து சாமியாருக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் அன்ன தானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×