search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    அதிமுக-பாமக ஆதரிக்காமல் இருந்திருந்தால் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேறி இருக்காது- திருமாவளவன்

    அதிமுக மற்றும் பாமக ஆதரிக்காமல் இருந்திருந்தால் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேறி இருக்காது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் ஜமாத்தார்கள் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சியினர் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை கைவிட வலியுறுத்தியும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிற்கு எதிராக அறவழியில் போராட வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் எதிர் கொள்வதற்கான நெஞ்சுரத்தை பெற வேண்டும். இது சாதாரண போராட்டம் அல்ல. இந்தியாவின் இரண்டாவது விடுதலை போர். மிக மோசமான பயங்கரவாதிகளின் கையில் இந்த நாடு சிக்கியுள்ளது. ராணுவத்தை எதிர்கொள்ள வேண்டிய ஒரு கட்டம் இருக்கின்றது. அந்த அளவிற்கு இந்த அரசு போய் கொண்டிருக்கின்றது.

    தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைமுறைக்கு வந்தால் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்பட 8 கோடி பேர் குடியுரிமை அற்றவர்களாக மாற்றப்படுவார்கள். அப்படியானால் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குடியுரிமை பெற்றவர்கள், குடியுரிமை அற்றவர்கள், சந்தேகத்திற்குரிய குடிமக்கள் என 3 பிரிவுகள் நடைமுறைக்கு வரும்.

    தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைமுறைக்கு வந்தால் சந்தேகத்திற்குரிய குடிமக்களாக நானும் வரலாம், எடப்பாடி பழனிச்சாமியும் வரலாம். தமிழகத்தில் மிகப்பெரிய துரோகத்தை அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் செய்து கொண்டிருக்கின்றது. எதிர்காலத்தில் மக்களுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும். அ.தி.மு.க.- பா.ம.க. மட்டும் ஆதரிக்காமல் இருந்திருந்தால் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேறி இருக்காது. சட்டமாக மாறி இருக்காது. நிலுவையிலேயே இருந்திருக்கும்.

    தேசிய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்டவைகளால் இந்த தேசம் மிக மோசமான ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டத்தில் இருப்பதால் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய கட்டத்தில் உள்ளோம் என்றார்.

    Next Story
    ×