search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அடிப்படை வசதி கேட்டு சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டம்

    கோவை பீளமேட்டில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியில் அடிப்படை வசதி கேட்டு 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை:

    கோவை பீளமேட்டில் உள்ளது சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி. மத்திய அரசுக்கு சொந்தமான இந்த கல்லூரியில் ஜவுளி குறித்த பாடம் கற்பிக்கப்படுகிறது. மத்திய அரசு நடத்தும் நுழைவு தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இங்கு சில மாதங்களுக்கு முன்பு அடிப்படை வசதி மற்றும் போதிய ஆசிரியர்கள் இல்லை என்று மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி இந்த கல்லூரிக்கு வந்தார். அப்போது மாணவர்கள் இது குறித்து அவரிடம் புகார் அளித்தனர். இந்த கல்லூரி மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட உள்ளது. இணைந்த பின்னர் அடிப்படை தேவை மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை போக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    அதன்பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி இன்று 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் இது குறித்து கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
    Next Story
    ×