search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோழிப் பண்ணை
    X
    கோழிப் பண்ணை

    கொரோனா வைரஸ் பீதியால் கோழி விலை அதிரடி சரிவு

    கொரோனா வைரஸ் பீதியால் கோழி விலை அதிரடியாக சரிந்து வருகிறது. ஒரு கிலோ கோழி (உயிருடன்) ரூ.49-க்கு தற்போது விற்பனை ஆகிறது.
    சென்னை:

    சீனாவில் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது. இந்த வைரஸ் கோழி போன்ற பறவைகள் மூலம் பரவுவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

    ‘கொரோனா வைரஸ் பீதியால் கோழி விலை கடந்த சில நாட்களாக குறைந்துகொண்டே வருகிறது. கடந்த மாதங்களில் ரூ.200 வரை விற்பனையான ஒரு கிலோ கோழி(உயிருடன்) படிப்படியாக விலை சரிந்து நேற்று மொத்த மார்க்கெட்டில் ரூ.49-க்கு விற்பனை ஆனது. அதேவேளையில் நாட்டுக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லை. நாட்டுக்கோழி (உயிருடன்) ரூ.380 முதல் ரூ.400 வரை விற்பனை ஆனது.

    அசைவ பிரியர்களின் முதன்மையான விருப்ப உணவு சிக்கன் தான். சிக்கன் தந்தூரி, சிக்கன் 65, டிராகன் சிக்கன், சிக்கன் லாலிபாப், கிரில் சிக்கன், பெப்பர் சிக்கன், சில்லி சிக்கன், சிக்கன் டிக்கா, சிக்கன் மஞ்சூரியன் போன்ற பல்வேறு வகைகளில் சிக்கன் ருசித்து சாப்பிடப்பட்டு வருகிறது.

    தற்போது கோழி விலை குறைந்துகொண்டு வருவதால் சிக்கன் வகைகளின் விலையும் குறைய வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. குறிப்பாக சிக்கன் பிரியாணி விலை குறையும் என்றே அசைவ பிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இதுகுறித்து அசைவ பிரியர்கள் சிலர் கூறுகையில், “கோழி விலை உயரும்போதெல்லாம் சிக்கன் வகைகள் விலை உயரும். இப்போது கோழி விலை குறைந்து வருவதால், சிக்கன் வகைகள் மற்றும் சிக்கன் பிரியாணி விலை குறையும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றனர்.

    இதுகுறித்து சென்னை இறைச்சி சில்லரை வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் எம்.அன்வர் பாஷா குரோஷி கூறுகையில், ‘சென்னையில் ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம் கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஒரு கிலோ கோழி (உயிருடன்) ரூ.70 முதல் ரூ.75 வரையிலும், கறியாக ஒரு கிலோ ரூ.180 வரையிலும் விற்கப்படுகிறது.

    கொரோனா வைரஸ் பீதியால் கடந்த சில நாட்களாக கடைகளில் கோழிக்கறி வாங்குபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து இருக்கிறது. ஆனால், ‘பாஸ்ட் புட்’ மற்றும் ஓட்டல்களில் சிக்கன் உணவு வகைகள் வழக்கம்போலவே விற்பனை ஆகிறது’ என்றார்.
    Next Story
    ×