search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் பழனிசாமி
    X
    முதல்வர் பழனிசாமி

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை சேலம் வருகை

    சேலத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார். அவருக்கு ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர்.

    சேலம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நாளை (பிப்.24-ந் தேதி) கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சேலத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னையில் இருந்து நாளை மதியம் விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சேலம் வருகிறார். அவருக்கு மாநகர் மாவட்டச் செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர்.

    பின்னர், சேலம் புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் புகைப்பட கண்காட்சியைத் திறந்து வைக்கிறார். இதையடுத்து சேலம் 3 ரோடு வரலட்சுமி மஹால் மைதானத்தில் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாலையில் நடைபெறும் பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு சுமார் 47,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகிறார். பின்னர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்குகிறார்.

    26-ந் தேதி காலை தஞ்சாவூரில் நடைபெறும் அ.தி.மு.க. இல்ல நிர்வாகி திருமண நிகழச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டு செல்கிறார். திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு திருச்சி செல்லும் முதல்-அமைச்சர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    Next Story
    ×