search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    கருமேனி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    திருச்செந்தூரில் நடைபெற்ற டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, கருமேனி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படும் என அறிவித்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள் விபரம்:-

    1.தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், ஆலந்தலையில் 52 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் (தூண்டில் வளைவு) கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.

    2.தாமிரபரணி ஆற்றின் வெள்ள நீரை வறட்சிப் பகுதிகளுக்கு திருப்பி பாசன நிலங்கள் பயன் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தாமிரபரணி, கருமேனியாறு நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் நிலை 4-க்கான பணிகள் விரைவில் துவங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராம விவசாய நிலங்கள் பாசன உறுதி பெறும்.

    3.தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், அமராபுரம் கிராமத்தில் கருமேனியாற்றின் குறுக்கே 3 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை கட்டப்படும்.

    4.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்திற்கு 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்படும்.

    5.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டத்திற்கு 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்படும்.

    6.தூத்துக்குடி மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்திற்கு அணியாபரநல்லூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்படும். அங்கு பால் பண்ணை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

    7.கடம்பூர் பேரூராட்சி, விளாத்திகுளம் பேரூராட்சி, புதூர் பேரூராட்சி மற்றும் 180 கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகள் 10 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

    8. சாத்தான்குளம் மற்றும் திருவைகுண்டம் பேரூராட்சி சந்தைகள் தலா 1 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், திருச்செந்தூர் பேரூராட்சி சந்தை 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், உடன்குடி பேரூராட்சி சந்தை 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும்.

    9. ஆழ்வார்திருநகரி குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாசரேத் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பெருங்குளம் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் நிறைவேற்றப்படும்.

    Next Story
    ×