search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    உலக தாய்மொழி தினம் - தாய்மொழியை போற்றுவோம் என மு.க.ஸ்டாலின் டுவிட்

    உலக தாய்மொழி தினமான இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய்மொழியை போற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றுவதற்காகவும், பன்முகப் பண்பாடுகளைப் போற்றுவதற்காகவும், உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகின்றது.

    உலகில் உள்ள அனைத்து மக்களின் மொழி உரிமையைப் பாதுகாக்கவே 1999-ம் ஆண்டில், 21 பிப்ரவரியை சர்வதேச தாய்மொழி தினம் என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ அறிவித்தது.

    இந்நிலையில், உலக தாய்மொழி தினமான இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய்மொழியை போற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

    வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என சொல்லி வளர்ந்தது தமிழினம்! 
    தாய்மொழியே நம் உணர்ச்சி! எழுச்சி! வளர்ச்சி! மொழிப் பாதுகாப்பே இனப் பாதுகாப்பு; தாய்மொழி போற்றுவோம்!அனைவருக்கும் தாய்மொழி நாள் வாழ்த்துக்கள்! என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×